2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. லோன் அல்லது கடன் கேட்டிருந்தால் கிடைக்கும். வேலையாட்களை தக்க வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களைவிட்டு பிரிந்து போவார்கள். உங்களுடைய கல்வி நன்றாக உள்ளது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. ஏற்றுமதி தொழிலில் வராத பணங்கள் வந்துசேரும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். எது எப்படி இருந்தாலும் உங்களுடைய அந்தஸ்து, புகழ் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யலாம். நேரடியான, மறைமுகமான எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். இளைய சகோதர - சகோதரிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமானை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். எங்கெல்லாம் துர்க்கை மற்றும் காளி இருக்கிறார்களோ அவர்களை தரிசனம் செய்யுங்கள்.
