2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலை தேடுபவர்களுக்கு வேலை இருக்கிறது. வேலையில் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ அது கிடைக்கும். இன்னொரு பக்கம் வேலையில் சின்ன சின்ன தடைகள் இருக்கிறது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறுங்கள். வருமானங்களை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு நல்லது நடக்கும். உங்கள் தொழிலை பொறுத்தவரை லாபம், மகிழ்ச்சி, சந்தோஷம், வருமானம் அனைத்தையும் கொடுக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் இறையருளால் கைகூடி வரும். உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். எண்ணங்கள் செயலாக்கம் பெறும். நீங்கள் நம்பியவர்கள் நல்லது செய்வார்கள். கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. உங்கள் காதல் வெற்றி அடைந்து திருமணத்தில் முடியும். முறிந்த காதல் மீண்டும் சேரும். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.
