2025 ஜனவரி 28-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மெண்ட் ஆகியவை இருக்கிறது. குடும்பத்தில் சுப காரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தீர்க்க முடியாத வியாதியால் அவதிப்பட்டு வந்தவர்கள், அதில் இருந்து விடுபட அல்லது ஓரளவு குணமாக வாய்ப்புள்ளது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சுமாராகத்தான் உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். வருமானங்களும் பரவாயில்லாமல் இருக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு எதிர்பாராதவிதமாக திருமணம் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. இரண்டாம் திருமணம் நடப்பதற்கான சூழல்களும் உள்ளன. தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய நந்திகேஸ்வரரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 3 Feb 2025 5:15 PM IST
ராணி

ராணி

Next Story