2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இடம், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும், வண்டி - வாகனங்கள் எக்ஸ்சேஞ் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கான பொருளாதார சூழல்களும் ஏற்படும். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றினாலும் உங்களுக்கு வேலை இருக்கிறது. அதேபோல் வேலையில் மாற்றங்களும் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருக்கிறது. புதிய முயற்சிகள் எதுவும் கைகொடுக்காது என்பதால் பொறுமை, நிதானம், உறவுகள் விஷயத்தில் கவனம் தேவை. அவர்கள் நம்மை விட்டோ அல்லது நாம் அவர்களை விட்டோ பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில் நன்றாக உள்ளது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், பெண் தெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள். பைரவரை வணங்கி வாருங்கள்.

Updated On 13 Jan 2025
ராணி

ராணி

Next Story