2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. ஆனால், வருமானங்கள் சுமார். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் நல்ல லாபம், வருமானம் உண்டு. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் செய்யுங்கள். வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சந்தர்ப்பங்கள் இருந்தால் செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.