2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். பெரிய அளவில் முயற்சி எடுத்து செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். உங்களுக்கு பிரச்சினைகள் வரும் போதெல்லாம் அதை தீர்த்து வைப்பதற்கு யாராவது வருவார்கள். நீங்கள் நம்பியவர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டு. தொடர்புகொள்ள நினைப்பவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், பிளாட்பார பிசினஸ் என எதுவாக இருந்தாலும் உங்கள் துறைகளில் நன்றாக உள்ளது. குறிப்பாக, தரகர் தொழில், ரியல் எஸ்டேட், காண்ட்ராக்ட், கன்சல்டன்சி, மீடியா, மார்க்கெட்டிங் போன்ற எந்த தொழில் செய்தாலும் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. கல்வியில் கவனம் செலுத்துங்கள். புதிதாக ஏற்படும் காதல் விஷயங்களால் நன்மைகள் உண்டு. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் அத்தனையும் இருக்கிறது. பெண்களால் நன்மைகள், சகாயம், ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட், டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். இந்த வாரம், பகவான் கிருஷ்ணர் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.