2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத பயணம் குறிப்பாக, வேலையின் நிமித்தமான அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். வருமானத்தை உங்களுக்கு கூட்டும். சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு உங்களது துறைகளில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. கடன் கேட்டிருந்தால் கிடைக்கும். வேலை நன்றாக உள்ளது. ஏதோவொரு வேலை, வருமானம் உங்கள் வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றத்தை கொடுக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தால் கிடைக்கும். வேலையாட்களால் நற்பலன்கள் உண்டு. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். உயர் கல்வி நன்றாக உள்ளது. வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அலுவலக மாற்றம் வேண்டாம். நல்ல வேலை கிடைக்கும் வரை பொறுமையாக இருங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், நரசிம்மரையும், பைரவரையும் வழிபாடு செய்யுங்கள்.