2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைப்பது நடக்கும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். அதன்முலம் வருமானத்தை பெருக்குங்கள். இணையதளங்களில் தேடுதல் என்பது இருக்கும். நிறைய படிப்பதற்கான வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது. தொழில் துறைகளில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, டிஜிட்டல், மீடியா, மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் இருக்கிறது. உங்கள் சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம் மாற நினைத்தவர்களுக்கு மாற்றங்கள் உண்டு. கல்வி நன்றாக உள்ளது. அப்பா, அம்மா இருவரின் ஆதரவும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் நன்றாக உள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். நீண்ட தூர பயணம் செய்ய வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். தெய்வ அனுகூலத்தை கூட்டினால் உங்களின் எதிர்கால திட்டங்கள் நன்றாக இருக்கும். எது எப்படி இருந்தாலும் உங்கள் முயற்சிகள் அத்தனையும் நன்மையாக இருக்கும். இந்த வாரம் முழுவதும், விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.