2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருப்பார்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்களை நீங்களே டெவலப் செய்து கொள்ளுங்கள். எதிர்பாராத பயணம்; அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு தொழில் நன்றாக உள்ளது. நீங்கள் என்னவாக ஆக நினைக்கிறீர்களோ அதுவாகவே முயற்சி செய்யுங்கள்; நல்லதே நடக்கும். கல்வி நன்றாக உள்ளது. உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு போக நினைப்பவர்களுக்கு நன்றாக உள்ளது. வேலை, வாய்ப்புகளும் நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. இறைவனுடைய அனுகூலம் பரிபூரணமாக இருப்பதால் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முழுவதும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 25 Nov 2024 9:31 PM IST
ராணி

ராணி

Next Story