2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நீங்கள் நினைப்பது நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. உங்கள் பிரச்சினைகளை தீர்க்க இறைவனின் அனுகூலம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து யோசியுங்கள். நிச்சயம் கடந்த வாரத்தை போன்றே இந்த வாரமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். யாரெல்லாம் உங்களுக்கு உதவி, நன்மையை செய்வார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் நிச்சயம் உங்களுக்கு செய்வார்கள். தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். எதிர்பாராத பயணம் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவருமே லாபம் அடைவீர்கள். உயர்கல்வி நன்றாக உள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் செய்யலாம். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமியின் வழிபாட்டை பிரதானமாக செய்யுங்கள்.
