2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. நீங்கள் நினைப்பது நடக்கும்; அதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகள் செய்தால் வெற்றி பெறுவீர்கள். சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், உறவுகளால் நற்பலன்கள் அத்தனையும் இந்த வாரம் உண்டு. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கல்வி நன்றாக உள்ளது. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் அதுவும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு கண்டிப்பாக வேலை உண்டு. எது எப்படி இருந்தாலும் கன்னி ராசியை பொறுத்தவரை வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. கடன் பெற்றாவது நிரந்தரமான சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு எதிர்பார்த்தவர்களுக்கு அவரால் நற்பலன்கள், மகிழ்ச்சி, சந்தோஷம் அத்தனையும் இருக்கிறது. இந்த வாரத்தில் பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்வதை பார்த்து செய்யுங்கள். எதுவும் லாபகரமாக இல்லை. கையில் பணம், தனம் வருவதற்கும் வாய்ப்புகள் இல்லை. ஆதலால் முதலீடு விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாரம் முழுவதும், முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.
