2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வி நன்றாக உள்ளது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. கிரகங்களால் நற்பலன்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு பிரச்சினைக்குரியவர்களாக இருந்தாலும், இறுதியில் நன்மைகளை செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரத்தில் நிலையாக இருக்கக்கூடிய இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுதவிர நல்ல ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளும் உள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில், பார்ட்னர்ஷிப்போடு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. உங்கள் மணவாழ்க்கையும் மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். இரண்டாம் திருமணம் நடைபெறவும் வாய்ப்புள்ளது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். தைரியத்தோடு செயல்படுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பேச்சின் மூலமாக வருமானங்கள், சம்பாத்தியங்கள் இந்த வாரம் உண்டு. இந்த வாரம் முழுவதும், சிவனையும், பிரம்மாவையும் ஒருசேர வழிபாடு செய்யுங்கள்.

Updated On 28 Oct 2024 11:08 PM IST
ராணி

ராணி

Next Story