2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வருமானங்கள் இருந்தாலும் தெய்வ தரிசனம், குழந்தைகள் ஆகியவற்றுக்காக செலவு செய்வீர்கள். முயற்சி ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் உங்கள் முயற்சிகள் இறையருளால் நற்பலன்களை தரும். நீங்கள் நினைப்பது செயலாக்கம் பெரும். தெய்வ அனுகூலம் நன்றாக இருக்கிறது. வாழ்க்கையில் எப்போதெல்லாம் பிரச்சினைகள், போராட்டங்கள், மன குழப்பங்கள், நிம்மதியற்ற சூழல்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் விட்டுவிடாதீர்கள். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்ய வருவார்கள். வீடு, இடம் விற்கவில்லை என்று நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் எல்லாம் உருவாகும். அது சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும். கல்வி நன்றாக உள்ளது. திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். நடக்கும் அல்லது அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். தொழிலில் முன்னேற்றம் இருக்கிறது. கூட்டுத்தொழிலில் இருவரும் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். வேலை பரவாயில்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், பைரவரையும், தன்வந்திரி பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 15 Oct 2024 12:02 AM IST
ராணி

ராணி

Next Story