2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய முயற்சிகள் சுமாராக இருக்கிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை வருமானங்கள் இருக்கும் அளவுக்கு செலவினங்களும் இருக்கிறது. அதனால் வசதி இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். உறவுகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். குறிப்பாக, இளைய சகோதர - சகோதரிகள் விஷயத்தில் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். நீங்கள் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாரா செய்திகளில் தடைகள் என்பது இருக்கும். அதனால் நிம்மதியற்ற சூழ்நிலை என்பது இருக்கிறது. தேவை இருந்தால் பயணம் செய்யுங்கள். இல்லையென்றால் பயணத்தை தவிர்த்து விடுங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. கல்வி நன்றாக இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், டிரேடிங், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யாதீர்கள். அதற்கான சூழ்நிலைகள் இல்லை. நம்முடைய பணம், பொருள் முடங்கிக்கொள்ள அல்லது மாட்டிக்கொள்ளும் வாரமாக இருக்கிறது. அதனால் எந்த யூக வணிகங்களும் வேண்டாம். வேலையை பொறுத்தவரை ஏதோ ஒரு பணி, வருமானம் என்பது இருக்கிறது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். நீங்கள் பார்க்கும் வேலையே நிச்சயமற்ற தன்மையாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் பைரவரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 10 Sep 2024 3:48 AM GMT
ராணி

ராணி

Next Story