2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரத்தில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். அந்த அளவுக்கு பொருளாதாரம் இல்லை என்று நினைப்பவர்கள் பார்த்து செலவு செய்யுங்கள். ஏனென்றால் உங்களுடைய ராசிநாதன் 12-ஆம் இடத்தில் இருப்பதால் தேவையில்லாத செலவினங்கள், விரயம், நஷ்டம், வைத்தியச் செலவுகள் ஆகியவற்றை சந்திப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நிறைய தடைகள் இருக்கிறது. நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் தங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பார்கள். நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை உணரக்கூடிய வாரமாக இருக்கும். எல்லோரையும் நம்பி மோசம் போய்விட்டோம் என்ற வருத்தம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் யாரையும் பெரிதாக நம்பி விடாதீர்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தில் நிறைய தடைகள் இருக்கிறது. சொத்து விற்க முடியவில்லை, வீடு மாற முடியவில்லை என்றால் வருத்தப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். போக்குவரத்து, வண்டி, வாகனம் ஆகியவற்றில் பயணம் செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இளைய சகோதர - சகோதரிகளுக்கு சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை மற்றும் வருமானம், லாபம் இருக்கிறது. வேலையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இருக்கும். வேறு வேலைக்கு மாற நினைப்பவர்கள் மாறுங்கள். இந்த வாரம் முழுவதும் சனி பகவானையும், கருடாழ்வாரையும் தரிசனம் செய்யுங்கள்.

Updated On 3 Sep 2024 3:22 AM GMT
ராணி

ராணி

Next Story