2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், தொழில் தொடங்க வேண்டும், புதிதாக இண்டஸ்ட்ரியல் ஆரம்பிக்க வேண்டும், தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள்; பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். உங்கள் கௌரவம், அந்தஸ்து கூடும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கல்வியும் நன்றாக உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தெய்வ அனுகூலத்தால் நல்லதாகவே நடக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் செய்திகள் ஆரம்பத்தில் பிரச்சினை இருப்பதுபோல் தோன்றினாலும், இறுதியாக வெற்றி உங்களுக்குத்தான். நேர்காணலில் கலந்து கொண்டு வந்திருந்தாலும் இதே நிலைதான். தேவையில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம். யாரை நம்புவது; நம்பக்கூடாது போன்ற சிந்தனைகள் வேண்டாம். தைரியமாக செயல்படுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல சேல்ஸ், வருமானம் இருக்கிறது. அப்பாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டும் நன்றாக இருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் வருமானங்கள் இருக்கிறது. நல்ல நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையில் நன்கு கடின முயற்சிகள் எடுத்து செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் வேலையில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டு. இந்த வாரம் முழுவதும், துர்க்கையையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 14 Oct 2024 9:58 PM IST
ராணி

ராணி

Next Story