✕
2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்
உங்கள் ராசிநாதன் சூரிய பகவானுடன் இணைந்துள்ளதால் அதீத நற்பலன்கள் ஏற்படும். அறிவாற்றல், புத்தி கூர்மை, கணிதத்துறையில் நாட்டம், CA படிப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஆகியவை இந்த வாரத்தில் ஏற்படும். 3 மற்றும் 4 தேதிகளில் தாமதம், விரயம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 5, 6, 7 ஆகிய தேதிகளில் தொழில் அதீத நாட்டமும், அதன் மூலம் நல்ல லாபமும், புதிய முயற்சிகளும் உங்களுக்கு சாதகமான பலனை ஏற்படுத்திக் கொடுக்கும். 8,9 தேதிகளில் லாபகரமான விஷயங்கள் நிறைந்து காணப்படும். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று வெற்றியை தேடிக் கொள்ள முடியும்.
ராணி
Next Story