2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத பயணம், முற்றிலும் புதிய சூழல் மற்றும் புதிய இடங்களில் பயணம் செய்யக்கூடிய காலகட்டங்கள் ஆகியவை இருக்கின்றன. செலவினங்களும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. வேலையில் மாற்றங்கள் நிறைய இருக்கிறது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். நீங்கள் பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியை தொடர்வதற்கான ஆரம்பம் நன்றாக உள்ளது. இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கையில் ஒன்றிற்கும் மேற்பட்ட தொடர்புகள் ஏற்பட்டு விலகும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் சம்பாத்தியம் கையில் பணமாகவோ, பொருளாகவோ இருக்கும். பெரியளவில் என்டெர்டெயின்மென்ட் செய்ய வாய்ப்புள்ளது. தொழில் பரவாயில்லாமல் இருக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட பிசினஸ், ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்தால் நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் சக்கரத்தாழ்வாரையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள்.
