2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் சிந்தனை, செயல்பாடுகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுங்கள். வாழ்க்கையில் உங்களுக்கான அச்சீவ்மென்ட் என்ன? அதை எப்படி முழுமை பெறச் செய்வது? அவற்றிற்காக எப்படி போராடுவது? என இப்போதே திட்டமிடுங்கள். ஏனென்றால் கன்னி ராசியில் தற்போது மூன்று கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. அதனால் சில காரியங்களை துணிந்து செய்வதற்கு தெய்வங்கள் வழிவிடும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்னுக்கு வாருங்கள். பொருளாதார நிலைகள் பரவயில்லை. கையில் பணம், தனம், இருந்துகொண்டே இருக்கும். குரு பகவானும் உங்கள் ராசியை பார்ப்பதால் இயற்கையாகவே இந்த வாரம் உங்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கும். அந்த அனுகூலத்தால் எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனத்துக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. உயர்கல்வி நன்றாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு வகையில் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்தால் மகசூல், லாபம் கிடைக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் தவிர மற்ற யூக வணிகங்கள் எதுவானாலும் பணம் முதலீடு செய்ய வேண்டாம். லாபம் வருவது மாதிரியான ஒரு தோற்றம். ஆனால், எதிலும் லாபம் இல்லை. விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வாரம் முழுவதும், முருகன் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 1 Oct 2024 9:25 AM IST
ராணி

ராணி

Next Story