2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரத்தில் கடன் அல்லது லோனுக்கு எதிர்பார்த்து காத்திருந்தாள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானங்கள் இருக்கின்றன. அதற்கேற்ற செலவினங்களும் பெரிய அளவில் உள்ளன. இளைய சகோதர - சகோதரிகள், உறவுகளை பிரிந்து இருக்க வேண்டிய வாய்ப்பு அல்லது அவர்களுக்காக செலவு செய்ய வேண்டிய வாய்ப்பு ஆகியவை இருந்துகொண்டே உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மகசூல், லாபம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பரவாயில்லாமல் இருக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். எல்லாமே லாபம் வருவது மாதிரியான தோற்றம் தரும். ஆனால், லாபம் இல்லை. உங்கள் பணம், பொருள் முடங்கிக்கொள்ளும் காலகட்டமாக உள்ளது. வேலையை பொறுத்தவரை, அதில் சிறு மாற்றங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நடக்கும். தொழில், மணவாழ்க்கை இரண்டுமே சுமார்தான். ஒன்றிற்கும் மேற்பட்ட பிசினஸ், ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். உயர் கல்வியை தொடரலாம். உங்கள் ஸ்தானத்தை குரு மற்றும் சனி பார்ப்பதால் புதிய முயற்சிகள் இல்லை என்றாலும் மனம் தளர வேண்டாம். வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.