✕
2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
எளிதில் யாரையும் நம்பி ஏமாறவேண்டாம். ஜாக்கிரதையாக இருங்கள். எதிர்பாராத நபர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். வாரத்தில் முற்பகுதியில் வியாபாரம், வேலையில் முன்னேற்றம் இருக்கும். பிற்பகுதியில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். தேவையில்லாத பிரயாணங்கள், தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். எதிர்பாராத இடத்திலிருந்து பொருள் உதவி மற்றும் நல்ல நண்பரின் ஆதரவு கிடைக்கும். அறிமுகமில்லாத ஒருவரின் அறிவுரை வாழ்க்கையை மேன்மையடைய வைக்கும். குல தெய்வ தரிசனம் கிடைக்கும். பழைய உறவினர்களுடன் நேரம் செலவிடுவீர்கள்.

ராணி
Next Story