2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்களுக்கு வருமானங்கள் இருக்கிறது. அதற்கு ஏற்ற செலவினங்களும் அதிகமாக இருக்கிறது. அதனால் வாய்ப்பிருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். கையில் அந்த அளவுக்கு பணம் இல்லை என்றால் பொறுமையாக இருங்கள். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வேலையில் பணிமாற்றம், அலுவலக மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். ஏனென்றால் வேலை நிமித்தமான மாற்றங்கள் உங்களுக்கு இருக்கிறது. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்க்கு விண்ணப்பித்திருந்தால் வர வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் உங்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள். சொந்தமாக இடம், வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் குறைவாக இருக்கும். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது அவ்வளவு நன்றாக இல்லை. எல்லாமே லாபம் வருவது போன்ற ஒரு தோற்றம். ஆனால், அந்த லாபம் முடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமில்லை டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற யூக வணிகங்கள் எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். எதுவும் லாபகரமாக இல்லை. இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.