2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கிரக நிலைகள் ஒருபக்கம் சாதகமாகவும், மறுபக்கம் பாதகமாகவும் இருப்பதால் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளது. பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடாதீர்கள். தேவை இருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரையில், எவ்வளவு சம்பாதித்தாலும் செலவினங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளிலும் சரி, உங்களின் சொத்துக்களை விற்பதிலும் சரி நிறைய தடைகள் இருக்கிறது. எல்லாவற்றிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத் தொழிலும் பரவாயில்லை. மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷமாக இருக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எந்த துறையாக இருந்தாலும் நல்ல வருமானம் உண்டு. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இந்த வாரத்தில் உங்களின் கௌரவம், புகழ் கூடும். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 6 Aug 2024 4:07 AM GMT
ராணி

ராணி

Next Story