2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. அதற்கேற்ற செலவினங்களும் இருக்கின்றன. இந்த வாரமும் கிரக நிலைகள் சுமாராக இருப்பதால் பெரிய அளவில் புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம். உறவுகளால் மனவருத்தங்கள், மன அழுத்தங்கள், உடன்பிறப்புகளால் நிம்மதியற்ற சூழல்கள் ஆகியவை இருக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளும் ஏற்றம், முன்னேற்றத்தை கொடுக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். லாபம் வருவதுபோன்ற ஒரு தோற்றம் இருந்தாலும் லாபம் இல்லை. இதுதவிர எல்லாவிதமான யூக வணிகங்களிலும் கவனம் தேவை. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் ஆடி மாதமாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய மகாலட்சுமி வழிபாடு மற்றும் சிவன் தரிசனம் செய்யுங்கள்.
