2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம் உண்டு. முயற்சிகளில் ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் பிற்பாடு நன்றாக இருக்கும். உறவுகளிடம் நன்றாக நடந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை வரும். நிதானமாகவும், யோசித்தும் முடிவுகளை எடுங்கள். காதல் வெற்றியடையாது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் தொல்லைகள் உண்டு. வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார். பணத்தை எதிலாவது முதலீடு செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் கணவன் அல்லது மனைவிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு விரயங்கள் ஏற்படும். குழந்தைகளுக்காக செலவு செய்ய நேரிடும் அல்லது அவர்களைவிட்டு பிரிந்திருக்க நேரும். சிவ ஸ்தலத்தில் இருக்கும் பிரம்மாவை வழிபடுவதுடன், துர்கையை தரிசனம் செய்ய கஷ்டங்கள் குறையும்.