2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் இருக்கும். ஏற்கனவே கடன் கேட்டிருந்தால், லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். ஆண் வேலையாட்கள் அமைவார்கள். எதிரிகள் யாராக இருந்தாலும் வெற்றி கொள்வீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கிறது. பெரிய அளவில் பிசினஸ் மற்றும் தொழில் தொடங்க நினைப்பவர்கள், தொழில் முனைவோராக வர நினைப்பவர்களுக்கு உங்களின் கௌரவம், அந்தஸ்து கூடும். தொழில் பெரிய அளவில் பிரபலமாக வாய்ப்புள்ளது. நட்பு வட்டாரத்தை மேம்படுத்துங்கள். நண்பர்கள் உங்களைவிட்டு பிரிந்துபோக வாய்ப்புள்ளது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம், மகசூல் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாள் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 23 Sept 2024 10:55 PM IST
ராணி

ராணி

Next Story