2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வி நன்றாக உள்ளது. நிரந்தரமாக சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் நிறைய உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. எதிர்பாராத எண்டெர்டெயின்மென்ட், டூர், தெய்வ தரிசனம் ஆகியவை இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தால் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைக்காக ட்ரீட்மென்ட் எடுத்தாலும் வெற்றி கிடைக்கும். கெரியரை பொறுத்தவரை வேலையில் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். செய்யும் வேலையை திருப்திகரமாக பாருங்கள். நீங்கள் பார்க்கும் வேலையிலிருந்து ஒன்று வெளியே வரவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால், வேலையை கவனமாக பார்த்து வாருங்கள். பெரிய அளவில் கடன் இருந்தால் அது குறைவதற்கான அறிகுறிகள் உங்களுக்கு தெரியும். நாள்பட்ட நோயில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். சொந்த தொழில் நன்றாக இருக்கும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் மற்றும் தொழில் முனைவோராக வர நினைப்பவர்களுக்கு கிரக நிலைகள் சாதகமாக இருக்கின்றன. நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போகவோ அல்லது சின்ன சின்ன மனவருத்தங்கள், மனக்கசப்புகள் ஏற்படவோ வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் உங்களின் இஷ்ட தெய்வம், குறிப்பாக பெண் தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 20 Aug 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story