2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். பொருளாதார ரீதியாக நன்றாக உள்ளதால் பண சுழற்சி இருக்கும். யாருடைய பணமாவது உங்களிடம் இருக்கும். நீங்கள் நினைப்பது நடக்கும். தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். வாழ்க்கையில் கண்டிப்பாக நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மைகள் உண்டு. யாரை நம்புகிறீர்களோ அவர்கள் ஏதோவொரு வகையில் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வாழ்க்கையில் எப்போதெல்லாம் பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கின்றதோ அப்போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். இந்த வாரமும் அது மாதிரியான நிகழ்வுகள் நடக்கும். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். குடும்பத்தில் சுப காரியங்கள், சுபநிகழ்ச்சிகள், நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத எண்டெர்டெயின்மென்ட், டூர், டிராவல் ஆகியவை இருக்கின்றன. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 8 July 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story