2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இருப்பதால் உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மெண்ட், டூர் இருக்கிறது. நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்வீர்கள். நல்ல லாபத்தை சம்பாதிப்பதற்கான வாரமாக உள்ளது. பொருளாதாரம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல லாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டால் தேர்வு செய்யப்படுவீர்கள். எதிரிகள் யாராக இருந்தாலும் வெற்றி கொள்வீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. தொழிலில் லாபம், வருமானங்கள் இருக்கிறது. கடன், நோய் குறையும். இந்த வாரம் முழுவதும் உங்களின் இஷ்ட தெய்வம் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 29 April 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story