2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத எண்டெர்டெயின்மெண்ட், உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. குழந்தை வரத்திற்காக காத்திருப்பவர்கள், அதற்காக சிகிச்சை எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நோய் மற்றும் கடன் இருந்தால் குறையும். உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத நண்பர்கள் வட்டாரம் உருவாகும். அவர்களால் ஏற்றம், மகிழ்ச்சி இருக்கிறது. தொழில் நன்றாக உள்ளது. சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு உங்கள் தொழில் லாபத்தையும், வருமானத்தையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் உங்கள் மீது திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பார். இந்த வாரத்தில் நல்ல வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கின்றன. இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் விநாயகரை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 22 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story