2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரமும், மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருப்பீர்கள். கடந்த வாரங்களில் நோயால் அவதிப்பட்டவர்களுக்கு நோயின் தன்மை குறையும். கடன் குறைவதற்கான வாய்ப்பு அல்லது அதில் இருந்து விடுபடுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானங்கள் கூடும். உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷை அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத எண்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல் இருக்கிறது. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், அவர்களால் ஏற்றம் ஆகியவை உண்டு. குடும்பத்தில் புதிய வரவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டும் நல்ல லாபத்தை கொடுக்கும். மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் நடக்கும். இந்த வாரம் முழுவதும் உங்களின் இஷ்ட தெய்வம் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
