2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷை அனைத்தும் பூர்த்தியாகும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத பயணம், டூர், எண்டெர்டெயின்மெண்ட் இருக்கிறது. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், குழந்தைக்கான வாய்ப்பு ஆகியவை உள்ளன. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் உழைப்பு இல்லாமலே சம்பாதிப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். எல்லாவிதமான யூக வணிகங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் நன்றாக உள்ளது. மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். மொத்தத்தில் இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக இருக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடக்கும் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த வாரம் முழுவதும் உங்களின் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வம், விநாயகர் ஆகியோரை வழிபாடு செய்யுங்கள்.
