2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால், உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக காதலித்து வருபவர்களுக்கு உங்கள் காதல் திருமணத்தில் முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ தரிசனம் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதற்காக சிகிச்சை எடுத்தாலும் வெற்றி பெறுவீர்கள். வேலைவாய்ப்பு மற்றும் தொழில் இரண்டும் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். தொழிலை விரிவுபடுத்த வேண்டும்; தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். நல்லது நடக்கும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். நல்ல நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோஷம் அத்தனையும் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் முருகனையும், பைரவரையும் வழிபாடு செய்யுங்கள்.
