2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நான்கு கிரகங்கள் உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும். இதுவரை நீங்கள் நினைக்காத, நினைத்து நடக்காத காரியங்கள் அனைத்தும் எளிமையாக நடக்கும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, எதிர்பாராத நட்பு வட்டத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைக்காக சிகிச்சை எடுத்தாலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். ஆனால், கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எதிர்பார்த்த அத்தனையும் கிடைக்கும். பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கிறது. காதல் விஷயங்களில் நிறைய பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கிறது. இருந்தாலும், புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயில்களில் இருக்கும் கருடாழ்வாரையும், சிவன் கோயிலில் இருக்கும் நந்திகேஸ்வரரையும் வழிபாடு செய்யுங்கள்.
