2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் மற்றும் நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. மூத்த சகோதர - சகோதரிகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நல்ல நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. உங்கள் கையில் பணம், தனம், பொருள் என்பது இருந்துகொண்டே இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை முன்னேற்றங்களும் கிடைக்கும். தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலும் லாபகரமாக இருக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். எது எப்படி இருந்தாலும் உங்களின் அந்தஸ்து, புகழ், கௌரவம் கூடும். தொழில் முனைவோராக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
