2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால், உங்களுக்கு அனைத்தும் நன்றாக இருக்கிறது. வேலையை பொறுத்தவரை, நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ் ஆகியவற்றை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்து ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். நேர்காணல்களில் கலந்துகொண்டிருந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். எதிர்பாராத தெய்வ தரிசனம் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் பரவாயில்லை. உங்களின் சொந்த தொழில் லாபத்தை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். நல்ல நட்பு உங்களை விட்டு பிரிய வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் உங்களின் இஷ்ட தெய்வம் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 4 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story