2025 ஜனவரி 28-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். பெரிய அளவில், ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும்; தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் தொழில் ஆரம்பிக்கலாம். வேலையை பொறுத்தவரை, வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் ஆகியவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அத்தனையிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த, எதிர்பாராத அத்தனை நன்மைகளும் கிடைக்கும். பேச்சை குறையுங்கள். தேவையற்ற பேச்சுகளை தவிர்த்துவிடுங்கள். வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் பரவாயில்லை. தொழிலால் வருமானம், சம்பாத்தியம் கண்டிப்பாக உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. இந்த வாரம் முழுவதும் இஷ்ட தெய்வம் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
