2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான பணிகளை செய்யலாம். புதிதாக ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும், தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான முயற்சி செய்யுங்கள். வாய்ப்புகள் உள்ளது. நல்ல நட்புகளை பராமரியுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஓரளவு பரவாயில்லை. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நினைப்பது நடக்கும். எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதிர்பாராத பயணம் உண்டு. அந்த பயணம் ஏதோவொரு வகையில் நன்மையாக முடியும். வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எதிர்பார்ப்பது அத்தனையும் நடக்கும். இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வார் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய நந்திகேஸ்வரரை வழிபாடு செய்யுங்கள்.