2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் அந்தஸ்து, புகழ், கௌரவம் கூடும். நல்ல நட்பு உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பொருளாதாரத்தை பொறுத்தவரை வருமானத்திற்கு ஏற்ற செலவுகளும் உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறும். என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும். தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்புகொள்ளுங்கள். எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு நன்மை உண்டாகும். தேடுதல் என்பது அதிகமாக இருக்கும். அதனால் வெற்றிகள் கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழில் பெரிய அளவில் லாபம், வருமானம், சம்பாத்தியத்தை கொடுக்கும். தொழிலில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். காதல் பிரேக்-அப் ஆவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதனால் காதல் விஷயங்களில் கவனமாக இருங்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்வது வேண்டாம். யூக வணிகங்களும் சுமாராகவே இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.