2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இயற்கையாகவே தெய்வ அனுகூலம் இருப்பதால் எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. உங்களின் திட்டங்கள், எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் நன்றாக உள்ளது. உங்கள் தொழிலில் நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். தொழிலில் பெரிய அளவில் சாதிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான வேலைகளை தொடங்குங்கள். அனைத்துமே நன்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. உயர் கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளது. எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையில் முன்னேற்றம், பணி உயர்வு, சம்பள உயர்வு இவை அனைத்தும் இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அதிலும் பெண் வேலையாட்கள் அமைவார்கள். புதிய முயற்சிகளை பெரிய அளவில் கொண்டு செல்லும் பொழுது பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்த வாரத்தில் யூக வணிகங்கள் எதுவும் வேண்டாம். அந்தஸ்து, புகழ் கூடும். வாரம் முழுவதும், முருகனையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள்.