2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். இறையருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைக்காக சிகிச்சை எடுத்தாலும் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் நன்மைகள் உண்டு. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானத்திற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கிறது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அல்லது அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்கள் அத்தனை பேருக்கும் தொழில் நன்றாக இருக்கிறது. காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட் போன்ற தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கிறது. பயணம் அந்த பயணத்தால் நன்மைகள் இருக்கிறது. துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகள் உங்களுக்கு சில வெற்றிகளை கொடுக்கும். எதிர்பாராத தைரியம், தன்னம்பிக்கை வரும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். வேலை நன்றாக உள்ளது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. வீடு, இடம் போன்றவற்றில் மாற்றங்கள் உண்டு. இந்த வாரம் முழுவதும், நவக்கிரகத்தில் இருக்கும் சனிபகவானையும். பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரையும் வழிபாடு செய்யுங்கள்.