2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எல்லா விஷயங்களிலும் கவனமாக இருங்கள். யாருக்கும் பணம் கொடுப்பதாக இருந்தால் யோசித்து கொடுங்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களுடைய பணம் முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். அந்த பணம் எப்போது வரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அதனால் அது விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குடும்பத்தில் புதிய வரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். நிறைய தேடுதல் என்பது உங்களுக்கு இருக்கிறது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இருக்கும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். நீங்கள் நம்பி இருப்பவர்கள் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டும் லாபகரமாக இருக்கும். இண்டஸ்ட்ரியல், ஸ்டார்ட்டப் நிறுவனம், தொழில் முனைவோராக வர நினைப்பவர்களுக்கு அதற்கான கிரக நிலைகள் நன்றாக உள்ளது. நல்ல நட்புகள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயில்களில் இருக்கும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.
