2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தொழில் நன்றாக உள்ளது. மணவாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். எதிர்பாராத டூர், டிராவல், என்டெர்டெயின்மென்ட் இருக்கிறது. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது நிறையவே உள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நற்பலன்கள் இவை அத்தனையும் இருக்கிறது. நட்பு வட்டாரம் டெவலப் ஆகும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருக்கும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கூடும். கையில் பணம், தனம் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு ஏற்றமாக இருக்கும். கல்வியில் கவனம் செலுத்துவது முக்கியம். சிறு தொழில், சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. துணிந்து செயல்பட்டால் பின்னாளில் நல்ல பலன் கிடைக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். சமூக அக்கறை கூடும். இந்த வாரம் முழுவதும் இன்பமாக இருப்பீர்கள். கூட்டுத்தொழிலிலும் நல்லதொரு முன்னேற்றம் உண்டு. வாரம் முழுவதும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 29 Oct 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story