2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. கடனில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு, சந்தர்ப்பம் ஏற்படும். நோயில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. அவர்களுக்கு சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருந்தாலும் அதற்கு எற்ற செலவினங்களும் இருக்கிறது. நீங்களும் தாராளமாக செலவு செய்வீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷன் தொடர்பாக பரவாயில்லாமல் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. வேலையை பொறுத்தவரை முன்னேற்றங்கள் உண்டு. வேலையில் வருமானங்கள் இருந்தால் கூட , நீங்கள் பார்க்கும் வேலையை விடவேண்டிய சூழலும் இருக்கிறது. வேலையில் நிச்சயமற்ற தன்மையும், போராட்டமும் இருந்துகொண்டே இருக்கிறது. அதனால் எந்த துறையில் பணியாற்றினாலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் இரண்டுமே நன்றாக இருக்கும். இரண்டிலும் நல்ல லாபம் கிடைக்கும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிதாக இண்டஸ்ட்ரியல், ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் துர்கை மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 10 Sep 2024 3:51 AM GMT
ராணி

ராணி

Next Story