2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வி நன்றாக உள்ளது. நிரந்தரமாக ஒரு இடம், வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வாங்குவதற்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் உங்களுக்கு அமையும். அதற்காக பணம் இல்லையே என்று கவலைப்பட தேவையில்லை. லோன் அல்லது கடன் வாங்கி வாங்குவதற்கான காலகட்டங்கள் இருக்கிறது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானங்கள் இருக்கிறது. அதற்கேற்ற செலவினங்களும் உண்டு. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பார்த்து செய்யுங்கள். லாபம் வருவது போன்ற ஒரு தோற்றம். ஆனால், லாபம் இல்லை. சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் பரவாயில்லை. வேலையை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றினாலும் பார்க்கும் வேலையில் திருப்தி என்பது இருக்காது. இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை. எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் ஒரு மன நிம்மதியற்ற சூழ்நிலை இருக்கும். காரணம் வேலையில் டென்ஷன், பிரஷர் ஆகியவை இருக்கும். இந்த மன நிலைகளை மாற்றி கிடைத்த வேலையை திருப்தியோடு செய்யுங்கள். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பெரிய அளவில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அம்மாவின் அன்பு, ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தால் கிடைக்கும். உங்களின் கௌரவம், அந்தஸ்து கூடும். ஏதோவொரு வகையில் செல்வாக்கு அதிகரிக்கும். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.
