2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. கையில், பணம், தனம், பொருள் இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. உங்களின் ஆசை உணர்வுகளை தூண்டக்கூடிய கிரக நிலைகள் உள்ளதால், விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பாக டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோ கரன்சி போன்றவற்றிலும் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையில் ஏதாவது ஒன்றில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கும் அளவுக்கு வருமானங்கள் இல்லை. பொருளாதார நிலைகளை பொறுத்தவரையில், எவ்வளவுக்கு எவ்வளவு வருமானங்கள் இருக்கிறதோ அந்த அளவுக்கு செலவினங்களும் இருக்கிறது. அதனால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வது நல்லது. பெரிய அளவில் எதிலும் முயற்சிகள் எடுக்காமல் இருப்பது நல்லது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் ஒரு திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் யாரும் உங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். அதனால் எல்லோருடனும் அனுசரித்து போவது நல்லது. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.