✕
x
2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒரு பக்கம் நன்மை இருக்கும். தேவையில்லாமல் எந்த விஷயத்திலும் தலையிட வேண்டாம். பொறுமை அவசியம். தேவையற்ற கடன் வேண்டாம். திருமண வாழ்க்கையிலும் கவனமாக இருங்கள். சம்பாத்தியம் இருந்தாலும் செலவு உண்டு. புதிய முயற்சிகள் வேண்டாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் வருமானம் சுமாராகத்தான் இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுயதொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார், நீங்கள் நஷ்டமடைவீர்கள். எதிர்பாராத நட்பு கிடைக்கும். அந்நிய மொழி பேசும் நண்பர்கள், மூத்த சகோதர, சகோதரிகளிடம் கவனமாக இருங்கள். இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.

ராணி
Next Story