ராசிநாதன் 3 மற்றும் 4 ஆம் இடங்களில் அமர்ந்து பிருகு மங்கள யோகம் என்று சொல்லக்கூடிய செவ்வாயுடன் இணைந்திருக்கிறார். இது மருத்துவம், விளையாட்டு, அதிகாரம், கட்டடம், நெருப்பு முதலிய துறையினருக்கு மேன்மை தரும். விளையாட்டுத் துறையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இது திருப்புமுனை மாதமாக அமையும். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு கிழக்கு திசை வழி லாபங்கள் கிடைக்கும் தன்மை, வெளிநாட்டில் இருப்போருக்கு இருக்கும் நாடுகளிலேயே நல்ல மாற்றங்கள் உண்டாகும். வேலை இழந்தோருக்கு முன்னைக்காட்டிலும் நல்ல வேலைவாய்ப்பு அமையும். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

Updated On 12 July 2023 1:07 PM IST
ராணி

ராணி

Next Story