2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எல்லா விஷயங்களிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் சுமாராக இருக்கும். உங்கள் கையில் பணம், தனம் இருந்தால் கூட அதனால் பிரயோஜனம் இல்லை. திரும்ப திரும்ப முயற்சித்தால்தான் வெற்றி பெறுவீர்கள். சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் செயல்பட்டால்தான் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்ய வேண்டாம். காதலில் பிரேக் அப் ஏற்பட வாய்ப்புள்ளது. தெய்வ அனுகூலத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையை பொறுத்தவரை கவனம் செலுத்துங்கள். உடன் பணியாற்றுபவர்கள் இடமும் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகள் சொல்வதை கேளுங்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் இல்லாவிட்டால் வேலையில் நிறைய பிரச்சினைகள், மனவருத்தங்கள் ஏற்படும். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும் அல்லது ஏதோவொரு விதத்தில் காப்பாற்றபப்டும். புதிதாக நட்பு வட்டாரம் ஏற்படும். அதனால் மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் பிரத்தியங்கிரா தேவியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 8 July 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story