2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டு. புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் உங்கள் காதல் திருமணத்தில் முடியும். கடன் மற்றும் நோய் குறையும். உடல் உழைப்பு இல்லாமல் வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை சுமார். நீங்கள் பார்க்கும் வேலையைவிட்டு வெளியே வரவேண்டும் அல்லது வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு மற்றும் பணிச்சுமை போன்ற சூழ்நிலைகள் உருவாகும். அதனால் வேலையில் பொறுமையாகவும், கவனமாகவும் இருங்கள். அவசரப்பட்டு இருக்கும் வேலையை விட்டுவிடாதீர்கள். எதிர்பாராத நட்பு கிடைக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், டூர் டிராவல் ஆகியவை இருக்கிறது. இறையருளால் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் முழுவதும், சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்யுங்கள்.
